Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கழன்று ஓடிய சக்கரம்…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுநர்…. கோவையில் பரபரப்பு…!!

பழுதடைந்த அரசு பேருந்தின் முன்புற சக்கரம் கழன்று ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து மெட்டுவாவி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் திடீரென பழுது ஏற்பட்டதால் பயணிகளை கீழே இறக்கிவிட்டனர். அதன்பின் பழுதடைந்த பேருந்து பணிமனை நோக்கி இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்றாம்பாளையம் பிரிவில் நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பேருந்தின் முன்பக்க இடதுபுற சக்கரம் கழன்று ஓடியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஓட்டுனர் சாமர்த்தியமாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டார்.

இந்த பேருந்தில் பழுது ஏற்பட்ட உடனே பயணிகளை கீழே இறங்கி விட்டதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பணிமனை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்து சக்கரத்தை பொருத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து பழுதடைந்த பேருந்துகளை முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |