எம்.சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு சென்று கொண்டிருந்த லாரி கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்துள்ள அனுமந்தன்பட்டியில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். லாரி டிரைவரான இவர் எம்.சாண்ட் மணல் ஏற்றிக்கொண்டு கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் குமுளி அருகே உள்ள சுரங்கனாறு நீர்வீழ்ச்சி சாலையில் சென்று கொண்டிருந்தபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. அப்போது நிலை தடுமாறிய லாரி கவிழ்ந்து உள்ளது.இந்த கோர விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் பாண்டியன் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற லோயர்கேம்ப் காவல்துறையினர் காயமடைந்த பாண்டியனை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சாலையில் கவிழ்ந்த லாரி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.