மாணவியை கடத்தி சென்ற வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ்பெரும்பாக்கம் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் உடல்நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்த மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மெக்கானிக் விஜய்(21) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஜயை கைது செய்தனர். மேலும் மாணவியை விட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.