ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சலேமர் என்ற பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுது நீக்கும் கடை ஒன்று உள்ளது. இதுபோன்ற மெக்கானிக் கடைகள் பொதுவாகவே சாக்கடையின் மேல் தளத்தில் அமைக்கப்படுவது வழக்கம். அப்போதுதான் மோட்டார் சைக்கிள்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் தண்ணீர் அப்படியே சாக்கடைக்குள் செல்லும். அந்த வகையில் மேற்குறிப்பிட்ட கடையும் அங்கிருந்து பாதாள சாக்கடையில் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த கடையில் வழக்கம்போல மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களும் மெக்கானிக் ஊழியர்களும் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த கான்கிரீட் தரைதளம் பாரம் தாங்காமல் உடைந்து. அதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து ஐந்து பேரும் தரைக்கு அடியில் இருந்த சாக்கடைக்குள் நுழைந்தனர். இந்த சப்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள் உடனடியாக வந்து அவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக சாக்கடைக்குள் அதிக அளவு தண்ணீர் இல்லாததால் அவர்கள் சிறிய காயத்துடன் உயிர் தப்பினர். அவர்கள் சாக்கடைக்குள் விழுந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.