ரிஷி சூனக்கின் மாமியார் ஒருவரின் பாதத்தை தொட்டு வணங்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.
பிரித்தானியாவின் பிரதமரான ரிஷி சுனக் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகளை தான் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் ரிஷி சூனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி கடந்த திங்கட்கிழமை மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது வாசகர்களை சந்தித்து பேசினார். அப்போது திடீரென அங்கு வலதுசாரி அமைப்பான சிவபிரதிஷ்தான் தலைவர் சம்பாஜி பிடே வந்தார். இந்நிலையில் சுதா மூர்த்தி அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் சம்பாஜி பிடே சமீபத்தில் அவரை பேட்டி எடுக்க சென்ற பெண் பத்திரிக்கையாளரை நெற்றியில் எதுவும் இன்றி விதவைப் போல் வராமல் பொட்டு வைத்துவிட்டு தன்னிடம் பேச வருமாறு கூறியிருந்தார். இதனால் அவருக்கு மாநில ஆண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நிலையில் சுதா மூர்த்திக்கு சம்பாஜி பிடே யார் என்பது தெரியாது. ஆனால் அவரின் வயதை கருத்தில் கொண்டு காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றதாக அவரது உதவியாளர் யோஜனா யாதவ் கூறியுள்ளார். மேலும் சம்பாஜி பிடே ஆதரவாளர்கள் அழைப்பு இல்லாமல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்தனர். வெளியில் அதிக அளவில் அவரது ஆதரவாளர்கள் திரண்டதால் சம்பாஜி பிடேவை சந்திக்குமாறு உள்ளூர் போலீசார் கேட்டுக் கொண்டனர். எனவே சுதா மூர்த்தி அவரை சந்தித்துள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் மாதம் மைசூர் அரச குடும்பத்தை சேர்ந்த ப்ரோமதா தேவி வாடியாரின் பாதங்களை இதுபோல் அவர் தொட்டு வணங்கிய சம்பவம் குறிப்பிடத்தக்கது.