Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கீழே விழுந்து இறந்த யானை…. தோல்வியில் முடிந்த முயற்சி…. வனத்துறையினரின் தகவல்…!!

காட்டு யானை திடீரென இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கோலிஞ்சிமடத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் சுற்றித் திரிந்தது. இதில் ஒரு யானைக்கு காலில் காயம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலை நடக்க முடியாமல் அந்த யானை சிரமப்பட்டுவதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் அந்த யானைக்கு கிளைகளை வெட்டி உணவாகக் கொடுத்தனர்.

ஆனால் அதனை யானையால் உட்கொள்ள முடியவில்லை. இதனை அடுத்து தண்ணீர் குடிக்காமல் சோர்வாக நின்ற யானை மதியம் ஒக்ஷ1 மணிக்கு திடீரென கீழே விழுந்து இறந்தது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் இளையராஜா கூறும்போது, உயிரிழந்தது 55 வயதுடைய பெண் யானை ஆகும். இந்த காட்டு யானையின் காலில் காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாமல் இருந்தது. இதனையடுத்து வலி தாங்க முடியாமல் உணவு, தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் யானை இறந்ததாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |