Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென குரைத்த நாய்கள்… காத்திருந்த பேரதிர்ச்சி… பழனி முருகன் கோவிலில் பரபரப்பு…!!!

பழனி மலை முருகன் கோவிலில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பழனி மலை முருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதால், அவர்களின் வசதிக்கு ஏற்றவாறு அடிவாரத்திலிருந்து மலை கோவில் செல்வதற்கு ரோப் கார் இயக்கப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக அது இயக்கப்படவில்லை. பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் படிப்படியாக மலை கோவிலுக்கு செல்கிறார்கள். அதனால் ரோப் கார் நிலைய பகுதியில் பக்தர்கள் நடமாட்டம் எதுவும் இல்லை. இந்நிலையில் நேற்று மதியம் அங்கு நாய்கள் கூட்டமாக நின்று குரைத்துக் கொண்டிருந்தன. அப்போது அதன் ஊழியர் அங்கு சென்று பார்த்தபோது, அப்பகுதியில் மலைப்பாம்பு ஒன்று நாயை விழுங்கி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அவர் உடனடியாக பழனி தீயணைப்பு நிலையத்திற்கும் கோவில் நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்தனர். ஆனால் மலைப்பாம்பு வாயில் சிக்கிய நாயை காப்பாற்ற முடியவில்லை. அதன்பிறகு தீயணைப்பு படையினர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த பாம்பை பழனி அருகே உள்ள வனப்பகுதியில் கொண்டு சேர்த்தனர்.

Categories

Tech |