கோவில் பூசாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பேராளம்மன் அம்மன் கோவில் தெருவில் கருப்பண்ணன்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பேராளகுந்தாளம்மன் கோவில் பூசாரியாக இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கருப்பண்ணன் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த கருப்பண்ணனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கருப்பண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.