சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு பகுதியில் திலகவதி(78) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி சமையல் செய்வதற்காக மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.