இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ். ராமலிங்கபுரம் கிராமத்தில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் உடல் கருகி கவிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.