Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென கேட்ட அலறல் சத்தம்…. அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர்…. பெரும் சோகம்…!!

பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தவசிலிங்காபுரம் கிராமத்தில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாலா என்று மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மாலா பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த மாலா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து மாலாவின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மாலா இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |