Categories
மாநில செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்…. அடுத்த நொடியை வண்டியை நிறுத்திய முதல்வர்…. என்னன்னு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் இருந்து நேற்று  இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக  ஆம்புலன்ஸ் ஒன்று  வந்துள்ளது. இதனை பார்த்த முதல்வர் பாதுகாப்பு வாகனங்கள் அதற்கு வழி விடுமாறு கூறியுள்ளார். இதனையடுத்து பாதுகாப்பு வாகனங்கள் அங்கிருந்து விலகியுள்ளது. அதன்பின்னர் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது.

இதனை முதல்வரின் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஒருவர்  வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பிரசாரத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகனங்களை நிறுத்த சொல்லி ஆம்புலன்ஸுக்கு   வழி விட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |