Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட சத்தம்….. அதிர்ச்சியில் பொதுமக்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கோவில் நகையை திருடிய நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகியபாண்டியபுரம் அருகே எட்டாமடை பகுதியில் முத்தாரம்மன் சுடலைமாடசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் ஏதோ சத்தம் கேட்டது. இந்த சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனே கோவிலுக்குள் சென்று பார்த்துள்ளனர்.

அப்போது கோவிலில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. இதனையடுத்து  அம்மனின் கழுத்திலிருந்த  3 கிராம் நகைகள்  திருடப்பட்டிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |