ஹரியானா மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரரான மனோஜ் குமார் என்பவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பணிக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சுமார் 9.30 மணிக்கு மனோஜ் பணியில் ஈடுபட்டிருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த சக ராணுவ வீரர்களுக்கு கேட்டுள்ளது. உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற ராணுவ படையினர் மனோஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என அறிந்தனர். பின்னர் மனோஜை அங்கிருந்த ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர், மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். பின்னர் மனோஜ்க்கு கொரோனா பரிசோதனை செய்த பிறகு அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறபடுகிறது. இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.