Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர சத்தம்….. துடிதுடித்து இறந்த தொழிலாளி…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கல்குவாரியில் நடந்த வெடி விபத்தினால் தொழிலாளி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார் நத்தம் பகுதியில் பாலு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான கல்குவாரி குரும்பபட்டியில் அமைந்துள்ளது. இந்நிலையில் பாறையை உடைப்பதற்காக எந்திரம் மூலம் துளையிட்டு அதில் வெடிமருந்து நிரப்பும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் வடிவேல் உள்பட 6 தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் 5 தொழிலாளர்கள் பாறையில் துளையிட்டு கொண்டிருந்தனர். அந்த துளைகளில் வெடிமருந்து நிரப்பும் வேலையை வடிவேல் செய்துள்ளார்.

அப்போது ஒரு துளையில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் வடிவேல் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் மற்ற துளைகளில் நிரப்பப்பட்ட வெடிமருந்து வெடித்து விடுமோ என்ற அச்சத்தில் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் வடிவேல் இறந்து கிடந்துள்ளார்.

அதன்பின் காவல்துறையினர் வடிவேலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிமருந்தை நிரப்பும் போது ஏற்பட்ட அழுத்தத்தால் விபத்து நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |