Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“திடீரென கோவிலில் கேட்ட சத்தம்” வசமாக சிக்கிய வாலிபர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

கோவில் உண்டியலில் பணம் திருட முயன்ற நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பூவராகசாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு  கோவில் காவலாளியாக விஜய் என்பவர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சன்னதிகளின் கதவுகளை பூட்டி கொண்டிருந்தார். அப்போது அம்புஜவல்லி தாயார் சன்னதியில் முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் சத்தம் போட்டு கத்தியுள்ளார்.

இதனை கேட்ட பொதுமக்கள் கோவிலுக்குள் சென்று தப்பியோட முயன்ற அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரிடம்   விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அவர் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சிராஜுதீன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் சிராஜூதீனை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 1 லட்சத்து 115 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |