தமிழகத்தில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது நகைப் பிரியர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது. இதனையடுத்தது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்துள்ளது. இதனால், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,805-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் ரூ.1.20 குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.64.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது