கொலம்பியா தங்க சுரங்கத்தில் இடிபாடுகளில் மாட்டிய 20 தொழிலாளர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
தென் அமெரிக்க நாட்டில் கொலம்பியாவின் மத்திய பகுதியில் உள்ள கால் டாஸ் என்ற இடத்தில் நெய்ரா நகரில் தங்க சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கம் வெட்டி எடுக்கும் பணியில் செய்து வருகிறார்கள் . அவர்கள் வழக்கம் போல நேற்று மாலை வேலை செய்து கொண்டிருந்தபோது சுரங்கத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதனால் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் அனைவரும் அலறி அடித்துக் கொண்டு சுரங்கத்தை விட்டு வெளியேறினார்.
ஆனால் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியில் வர முடியவில்லை .20 தொழிலாளர்கள் சுரங்கத்தின் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல்அளிக்கப்பட்டது.அந்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள்மற்றும் தேசிய பேரிடர் மீட்புக்குழு சம்பவ இடத்திற்கு விரைந்தன.அதன்பிறகு தீவிர மீட்பு பணியில் ஈடுப்பட்டனர் .ஆனால் இன்னும் மீட்பு பணிநடந்து கொண்டுதான் இருக்கிறது .சுரங்கத்தில் மாட்டிக்கொண்ட 20 தொழிலாளர்களின் நிலை என்ன என்பதுபற்றி தெரியவில்லை. இடிபாடுகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை உயிருடன் மீட்பதற்கான பணிகள் மிகத் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன .