லாரியில் ஏற்றி சென்ற மர பாரம் அரசு பேருந்து மீது சாய்ந்த விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டத்திலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது . இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஆசனூர் அருகே சென்று கொண்டிருந்த போது லாரியில் இருந்து மரங்கள் சரிந்து திடீரென அரசு பேருந்து மீது சாய்ந்தது.
இதனால் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகே அனைத்து வாகனங்களும் அங்கிருந்து புறப்பட்டு சென்றன. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.