Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென சாலையில் ஒருவருக்கு வலிப்பு….. உதவி செய்த அண்ணாமலை….!!!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்களிடம் பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டினார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்எல்ஏ மற்றும் துணைத் தலைவர் சக்கரவர்த்தி அகியோர்கள் விமான நிலையத்தில் இருந்த ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கிண்டி சாலையில் ஒருவர் வலிப்பு வந்து துடித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்து அண்ணாமலை காரை நிறுத்தி சொல்லி கீழே இறங்கி வலிப்பு வந்தவருக்கு உதவினார். அதனை தொடர்ந்து மற்றொரு காரில் வந்த பாஜக மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், வக்கீல் பிரபு, தலைவர் பால் கனகராஜ், செய்தி தொடர்பாளர் நாராயண திருப்பதி அகியோர் உடனே காரில் இருந்து இறங்கி வலிப்பு வந்த அந்த நபர் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை அங்கு இருந்துவிட்டு அதன் பிறகு கூட்டத்திற்கு சென்றனர்.

Categories

Tech |