பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை காண செல்வதற்காக இளவரசர் ஹரி சுய தனிமையில் உள்ளார்.
பிரிட்டன் இளவரசர் பிலிப்பிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் வசிக்கும் இளவரசர் ஹரிக்கு அவசரநிலை தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இளவரசர் ஹரி எப்போது வேண்டுமானாலும் புறப்பட்டு செல்ல தயாராக தனி விமானம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து செல்வதற்கு முன்பு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதாவது பிரிட்டன் அறிவித்துள்ள சிவப்புப் பட்டியலில் ஸ்பெயினுடன் சேர்ந்து தற்போது அமெரிக்காவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
ஆனால் இதுபோன்ற நடவடிக்கைகளில் இருந்து அரச குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இளவரசர் ஹரிக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் அவருக்கு பிரிட்டன் வந்தவுடன் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. இந்நிலையில் தற்போது இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கல் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே அவர் தன் கணவருடன் பயணம் மேற்கொள்வாரா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.