ஆட்டோ ஓட்டுநர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள கோவில் பாப்பாக்குடி பகுதியில் ரவி(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருக்கு பிரியா(24) என்ற மனைவி உள்ளார். நேற்று ரவி அப்பகுதியில் நின்று கொண்டிருந்தபோது திடீரென வந்த மர்ம நபர்கள் ரவியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதனால் படுகாயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரவி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முன்விரோதம் காரணமாக ரவி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.