Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென தடுமாறிய பைக்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. நாமக்கலில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்த விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் வள்ளிபுரத்தை அடுத்துள்ள மனியாபுரம் புதூரில் கந்தசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் தனது இருசக்கர வாகனத்தில் பாலப்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அறியாஊற்று அருகே சென்று கொண்டிருந்தபோது கந்தசாமியின் இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறியதில் அவர் கீழே விழுந்துள்ளார்.

இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய கந்தசாமியை அப்பகுதி வழியாக சென்றவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட நிலையிலும் கந்தசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மோகனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |