வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள பெரியகீரமங்கலம் பகுதியில் பாண்டிசெல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு சூர்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாண்டிசெல்வம் சம்பதன்று வயலில் நெல்விதைப்பு பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பாண்டிசெல்வம் வயலில் இருந்து திரும்பி வீட்டிற்கு சென்றுகொண்டிருந்துள்ளர்.
இதனையடுத்து திடீரென பாண்டி செல்வம் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குபதிவு செய்து பாண்டி செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மின்னல் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.