Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென தாக்கிய மின்னல்…. பரிதாபமாக இறந்த கன்றுக்குட்டிகள்…. பெரும் சோகம்…!!

இடியுடன் கூடிய கன மழையில் திடீரென மின்னல் தாக்கி இரண்டு கன்று குட்டிகள் பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகிலுள்ள பேடர்பாளையம் கிராமத்தில் விவசாயியான காளப்பா வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் கேர்மாளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களான பேடர்பாளையம், திங்களூர், காடட்டி, மந்தையை தொட்டி, சிக்கநந்தி ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

தற்போது அப்பகுதியின் சில கிராமங்களில் கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம்  மாலை 5 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. அதன்பின் சற்று நேரத்தில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதால் காளப்பா வீட்டில் வளர்த்து வந்த இரண்டு கன்றுக்குட்டிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியது .

Categories

Tech |