Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீரென தீக்குளித்த சிறுமி….. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி கிராமத்தில் சண்முகசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கௌசல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இவர்களது மூத்த மகள் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமி வீட்டிற்கு அருகே இருக்கும் இடத்தில் வைத்து உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் படுகாயமடைந்த சிறுமியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |