உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட மூதாட்டி மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி திருவள்ளுவர் தெருவில் விமலமணி(85) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இவர் தனது தங்கை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் விமலமணி வயது முதிர்வு காரணமாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் மனமுடைந்த மூதாட்டி அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையம் அருகே வைத்து மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி கொண்டு தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டனர். ஆனால் மூதாட்டி உடல் எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.