Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தீ விபத்துக்கு இதுத்தான் காரணமா… எரிந்து நாசமான பள்ளி வாகனம்… தீயணைப்பு வீரர்களின் தகவல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளியில் நின்று கொண்டிருந்த வாகனம் தடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியிலிருக்கும் தனியார் பள்ளி ஒன்றின் வளாகத்தில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பள்ளி வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாக தலைவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரவித்துள்ளனர்.

இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட போதிலும்  வாகனம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. இந்நிலையில் பேட்டரியில் ஏற்பட்ட பழுதே தீப்பிடித்ததற்கு காரணம் என தீயணைப்பு வீரர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |