உலகின் முக்கிய கப்பல் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீர் முனைக்கு அருகில் ஈரானுக்கு சொந்தமான “கார்க்” என்னும் போர் கப்பல் தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்க் கப்பல் கடலில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதையடுத்து தீப்பிடித்து கொண்டதை சுதாரித்துக்கொண்ட கப்பலில் இருந்த மாலுமிகள் அனைவரும் நல்ல வேளையாக கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். ஆனால் கப்பல் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து கடலில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் கப்பலில் தீ பிடித்ததற்கான காரணம் என்னவென்று இன்னும் தெரியவில்லை. எனவே இது சதியா? இல்லை விபத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது.