மர்ம நபர்களால் ஸ்கூட்டர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் அருகே நெலாக்கோட்டை கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பணப்பயிர்களை மொத்தமாக விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் பாஸ்கரன் தனது வீட்டிற்கு முன்பாக ஸ்கூட்டரை நிறுத்தி வைத்துள்ளார்.
இந்த ஸ்கூட்டருக்கு திடீரென மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து எரித்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஸ்கூட்டரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து நெலாக்கோட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.