மும்பையில் உள்ள வில்லே பார்லே பகுதியில் நேற்று இரவு 12:30 மணி அளவில் முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரின் எதிர்ப்புறம் வந்த கார் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த முதல் மாதிரி உடனடியாக தன்னுடைய காரை நிறுத்திவிட்டு பாதிக்கப்பட்ட நபரை அழைத்து விசாரித்தார். அந்த சமயத்தில் லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இருப்பினும் முதல் மந்திரி தன்னுடைய காரை விட்டு கீழே இறங்கி பாதிக்கப்பட்ட நபரிடம் பேசினார்.
அந்த நபர் விக்ராந்த் சிண்டே என்றும் தான் செல்ல வேண்டிய இடம் குறித்த விவரங்களையும் கூறினார். அதன் பிறகு பாதிக்கப்பட்ட நபர்களிடம் தீப்பிடித்து எரியும் காரின் அருகே யாரும் செல்ல வேண்டாம் உயிர் தான் முக்கியம் என்று முதல் மந்திரி கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் உரிய முறையில் உதவி செய்வதாக உறுதி அளித்துவிட்டு முதல் மந்திரி அங்கிருந்து கிளம்பி சென்றார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.