கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரைச் சேர்ந்த கிரீஷ்(27) காரில் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். இவர் அத்திப்பள்ளி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கிரீஷ் காரிலிருந்து கீழே குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.