ரயில்வே மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிருஷ்ணகாந்த்(44) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணகாந்த் வாகனத்தை உடனடியாக நிறுத்தி தன்னுடன் வந்த பெண்ணுடன் கீழே இறங்கினார்.
சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்து தீயை அணைத்தனர். இதனை அடுத்து கார் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.