பிரான்சில் மர்மநபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்சின் மத்திய பாரிஸில் 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சுடத் தொடங்கியுள்ளார். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். இருப்பினும் இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. இது குறித்து அந்த குற்றவாளியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொது மக்களை எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.