அமெரிக்காவில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இண்டியானாபோலிஸ் என்ற நகரில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள FedEx மையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 8 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மர்ம நபர் தன்னையும் சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#Indianapolis
Live from the FedEx facility. https://t.co/fExV3LlMfS pic.twitter.com/ETdRwNmBzz— Shane B. Murphy (@shanermurph) April 16, 2021
இந்நிலையில் இந்த தாக்குதலில் சுமார் 60க்கும் அதிகமான நபர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சம்பவ இடத்தில் உடனடியாக அவசர உதவி குழுவினரும், ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.