தொழிலாளியை கரடி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் அருகே கோட்டமாளம் பகுதியில் திம்மையன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இவர் நேற்று மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ஒன்று திடீரென திம்மையனை தாக்கியது. இதனால் திம்மையன் அலறினார். இவருடைய அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக வந்து கரடியை விரட்டினர்.
அதன் பிறகு காயம் அடைந்த திம்மையனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் திம்மையன் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.