விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மருதுபாண்டி பகுதியில் குணசேகரன் என்பவர் தீப்பெட்டி ஆலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் தீக்குச்சிகளை பெட்டியில் அடைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் 6 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். தீப்பெட்டி ஆலை உரிமையாளர் குணசேகரன் பணியாளர்களுக்கு தேவையான தீக்குச்சிகளை இறக்கிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக உராய்வு ஏற்பட்டு அனைத்தும் தீ பற்றி எரிந்தது. உடனே அருகில் இருந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து குணசேகரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.