திடீரென நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் ஆகும். இந்த பகுதியில் நேற்று திடீரென பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பிறகு 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த குண்டு வெடிப்பு ஷியா முஸ்லிம் பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் நடந்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புக்கு சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பானது நபிகள் நாயகத்தின் பேரனாக கருதப்படும் ஹூசைன் விழாவை அனுசரிக்க கூடிய இடத்தில் நடந்துள்ளது. மேலும் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம் பிரிவினருக்கிடையே மோதல் ஏற்படுவதால் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.