திடீரென நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போகி என்ற பகுதியில் கால்நடைகள் பண்ணை அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கரமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டின் போது 3 பேரின் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 2 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பிறகு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காவல்துறையினர் வருவதற்கு முன்பாக துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கடுமையான துப்பாக்கி சட்டங்கள் நாட்டில் பின்பற்றப்பட்ட போதிலும், பயங்கர துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.