சாராயம் கடத்திய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே பூந்தாழை என்ற இடத்தில் மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்காலிலிருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது அதில் 250 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து மதுவிலக்கு காவல்துறையினர் காரைக்காலிலிருந்து கடத்தி வரப்பட்ட சாராயத்தையும், காரையும் பறிமுதல் செய்ததோடு கார் ஓட்டுநரான கிளமெண்ட் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சுரேஷ் மற்றும் லூர்துசாமி ஆகிய 2 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.