பெரம்பலூரில் அரசு பேருந்து கண்டக்டர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னைக்கு திருச்சியில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று காலையில் பயணிகளுடன் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் தீரன் மாநகர் சாலையில் வசித்து வரும் பாலு என்பவர் பேருந்தை ஓட்டியுள்ளார். திருச்சி போலீஸ் காலனி பகுதியில் வசித்து வந்த விமல்பாபு என்பவர் கண்டக்டராக பணியாற்றி உள்ளார். பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு இந்த பேருந்து வந்த போது திடீரென்று கண்டகடர் விமல்பாபுவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அதனை கண்ட டிரைவர் பேருந்தை நிறுத்தினார். அதன்பின் பேருந்தில் பயணித்த சக பயணிகளின் உதவியுடன் டிரைவர் பாலு விமல்பாபுவை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.