Categories
தேசிய செய்திகள்

திடீரென நிறுத்தப்பட்ட ரயில்… ஊடகங்களில் வெளியான தகவல்… மறுத்த ரயில்வே நிர்வாகம்…!!!!!

ஆந்திராவில் உள்ள சித்தூர் மாவட்டம் குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே பெங்களூர் – ஹவுரா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்று நேற்று மதியம் 1 மணியளவில் கொண்டிருந்தது. அப்போது  ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. மேலும் தீ விபத்து ஏற்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டதாக ஊடகங்களில்  தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலை ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது, குப்பம் ரயில் நிலையத்திற்கு அருகே சென்றபோது ரயிலின் ஒரு பெட்டியிலிருந்து திடீரென புகை வந்ததை ரயில்வே ஊழியர் பார்த்து உடனடியாக நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. அப்போது பிரேக் பிணைப்பு மற்றும் பிரேக் ப்ளாக் உராய்வு காரணமாக புகை வந்தது. இதனையடுத்து உடனடியாக அந்தப் பிரச்சனை முழுவதுமாக சரி செய்யப்பட்டு மீண்டும் ரயில் 1:33 மணிக்கு புறப்பட்டு சென்றதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |