அமெரிக்காவின் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன.
அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியா என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்துள்ளன. இந்த காட்டுத்தீ சாலையோரத்திலிருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. கடந்த இரு வாரங்களில் அப்பகுதில் ஏற்பட்ட மூன்றாவது காட்டுத்தீ இதுவாகும்.
இதுபோன்று கிரீஸ் நாட்டில் வெஸ்போஸ் என்ற தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பலத்த காற்று வீசுவதால், தீ பரவல் தீவிரமான நிலையிலிருந்து, தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.