மதுரை மாவட்டத்தில் ஓடும் கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரில் குபேரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மேலூரின் யூனியன் ஆபீஸில் பணிபுரிந்து வரும் நிலையில், குபேரன் அலுவலகத்தின் காரில் சென்றுள்ளார் . அப்போது காரிலிருந்து திடீரென புகை எழும்பியுள்ளது. இதனால் காரிலிருந்த நபர்கள் உடனடியாக வெளியேறியுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தொடர்பு கொண்டுள்ளார்கள்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் பீச்சி காரில் இருந்த தீயை அணைத்தனர் . இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . மேலும் இது குபேரனுக்கு வைத்த பொறியா என்ற கண்ணோட்டத்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.