Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திடீரென பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

ஓடி கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி சுப்பிரமணிய நகர் பகுதியில் ராஜேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆஷா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜேஷ்குமார் தனது மனைவியுடன் காரில் திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார். புதூர் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது காரில் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தம்பதியினர் உடனடியாக காரை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார்.

சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் பற்றி எரிந்த தீயை ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |