சீனாவில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் செல்லக் கூடிய Shanghai Pudong விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு விமானம் ஒன்று நேற்று உள்ளூர் நேரத்தின் படி மாலை நான்கு மணிக்கு பாராத விதமாக தீப்பிடித்து எரிந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் 18 தீயணைப்பு வாகனங்கள் மூலமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.இத்தகைய நிகழ்வை விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மிகுந்த பயத்துடன் பார்த்தனர்.
பயங்கர கரும்புகையுடன் விமானம் பற்றி எரியும் ஒரு வீடியோ வெளியாகி இருக்கின்றது.
தீப்பிடித்த சரக்கு விமானமானது எத்தியோப்பியா ஏர்லைன்சை சார்ந்த விமானம். எவ்வாறு விமானம் தீப்பற்றி எரிந்தது என்பதை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.