Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயிலினால் அவதிப்படும் மக்கள்…. திடீரென சூறைக்காற்றுடன் பலத்த மழை… மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

சேலம் மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலில்  திடீரென கோடை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் என்பதால் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்கள் வெப்ப சலனத்தால் இரவு தூங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 100.4 டிகிரி வெயில் சுட்டெரித்த நிலையில் நேற்று சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் திடீரென பலத்த மழை பெய்துள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் மழை பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து தண்ணீர் பற்றாக்குறையால் பயிர் வகைகள் வாடிய நிலையில் காணப்பட்டதால் பயிர்களுக்கு குளிர்ச்சி விக்கும் வகையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |