Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென பழுதாகி நின்ற லிப்ட்…. குழந்தை உள்பட 3 பேர் மாட்டிக்கொண்ட பரிதாபம்…. சென்னையில் பரபரப்பு….!!!

மின்தூக்கியில் 3 பேர் மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் எல்லையம்மன் கோவில் அருகே 10 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இருக்கிறது. இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக கட்டப்பட்டு மீனவ மக்களுக்காக ஒதுக்கப்பட்டது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் உள்ள மின்தூக்கி திடீரென பழுதாகி நின்றதால் 1 மூதாட்டி, 3 வயது குழந்தை உள்பட 3 பேர் உள்ளே மாட்டிக்கொண்டனர்.

அவர்களுடைய அலறல் சத்தத்தை கேட்டு உடனடியாக குடியிருப்பில் இருந்தவர்கள் மின்தூக்கியில் மாட்டிக் கொண்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது குறித்து திருவொற்றியூர் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் கடப்பாரையால் மின்தூக்கியின் கதவை உடைத்து 3 பேரையும் மீட்டனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் அடிக்கடி மின்தூக்கி பழுதாவதால் அதை சீரமைத்து தருமாறு‌ மீனவ மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |