Categories
தேனி மாவட்ட செய்திகள்

திடீரென பிடித்த தீ… லட்ச ரூபாய் மதிப்புள்ள பஞ்சுகள் சேதம்… விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர்…!!

தலையணை நிறுவனத்தில் திடீரென தீப்பிடித்ததால் லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள 5 வது வார்டு பகுதியில் மகபூ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் தலையணை, பஞ்சு மெத்தை ஆகியவை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நிறுவனத்தின் பணியாளர்கள் வழக்கம்போல பஞ்சுகளை கடையும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென தீப்பொறி பட்டு பஞ்சுகள் தீப்பிடித்துள்ளது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக கட்டிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சென்ற கம்பம் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றுள்ளனர். இருப்பினும் பஞ்சு, தலையணை இருந்ததால் தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியுள்ளது. இதனால்  உள்ளே இருந்த பஞ்சு கடையும் இயந்திரம், தையல் இயந்திரம், சோபா செட், தலையணைகள், பஞ்சுகள் என அனைத்து பொருட்களும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.

Categories

Tech |