Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென புகுந்த பாம்பு…. அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்….. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

வீட்டிற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பத்திரமாக பிடித்துவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பாரதி நகரில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட தலைவராக இருந்துள்ளார். இந்நிலையில் முட்புதரில் இருந்து திடீரென வெளியே வந்த பாம்பு மாரிமுத்துவின் வீட்டிற்குள் புகுந்துவிட்டது. இதனை பார்த்ததும் சாப்பிட்டு கொண்டிருந்த குடும்பத்தினர் அலறி அடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 5 அடி நீளமுள்ள சாரைப் பாம்பை பத்திரமாக பிடித்துவிட்டனர். இதனையடுத்து அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.

Categories

Tech |